குஜராத் பழங்குடியின மக்களின் ஒரு பிரிவினர் பீலர்கள். அவர்கள் வழிவழியாகச் சொல்லி வந்த பாரதக் கதைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மதத் திருவிழாக்களில், கதை, பாடலாக பயன்படுத்திய இந்த வாய்மொழி இலக்கிய வடிவத்தை, தொகுத்து நுாலாக்கியவர், பகவான்தாஸ் படேல்.
குஜராத்தி மொழியில் எழுதப்பட்ட இந்த நுாலை, மிருதுளா பாரிக் இந்தியில் மொழிபெயர்த்துள்ளார். அதை, தமிழ் மொழியில் வழங்கியுள்ளார் பெ.சரஸ்வதி. மகாபாரதக் கதைகள் தமிழில் பல வடிவங்களில் உள்ளன. அதைப் போலவே, குஜராத்திப் பழங்குடியினரிடம் பயன்பாட்டிலிருந்த கதையை அறிந்துகொள்வதற்கு, இந்நுால் வசதியாக வெளியாகியுள்ளது.
பழங்குடியின மக்களின் ஆவணங்களில் ஒன்றாக பார்க்க முடிகிறது. பாரதக் கதைகளை, படைத்தவர் பெயருடன் சொல்லும் மரபு உண்டு. அதைப் போல், இதுவும் பீலர்களின் பாரதம் என, அந்த இனப்பெயருடன் திகழ்கிறது. வாய்மொழி இலக்கிய ஆய்வாளர், ஆர்வலர்களுக்கு பயன்படும் நுால்.
– முகிலை ராசபாண்டியன்