கல்வியின் வகைகளைப் பற்றி கவிதை நடையில் கருத்துக்களை தரும் நுால். குறட்பா வடிவத்திலும் கருத்துக்கள் உள்ளன.
கல்வியைப் பற்றி காமராஜர், தாகூர், வினோபா, விவேகானந்தர், நேருஜி, டாக்டர் ராதாகிருஷ்ணன், காந்தியடிகள் மற்றும் அம்பேத்கர் சொன்ன கருத்துக்கள் பொருத்தமான இடங்களில் எடுத்து சொல்லப்பட்டுள்ளன. எழுச்சிமிகு இசைப்பாடல் வடிவில் அமைத்து, விளையாட்டாக மூளையில் பதிய வைக்கும் வகையில் 30 கவிதைகளை தாங்கியுள்ள நுால். – சீத்தலைச் சாத்தன்