சாகித்திய அகாதெமி விருது பெற்ற வங்க நாவல் தமிழாக்கம் செய்யப்பட்டுள்ளது. ஆந்திர மாநிலம், கோல்கொண்டா, தன்யா நதி அதை சுற்றியுள்ள இயற்கை சூழல் பரந்த பரப்புக்குள் பாய்ந்து செல்கிறது. மலையில் வாழும் மக்களின் இன்ப, துன்பங்களை எடுத்துரைக்கிறது. மனதில் நிலைக்கும் சம்பவங்களை கொண்டுள்ளது.
ஆண், பெண் பேதத்தால் ஏற்படும் விபரீதம், பெண்ணை விருப்பம் இன்றி, கடத்தி சென்று நடத்தும் வாழ்க்கை முறை சார்ந்த நெருக்கடியை வெளிப்படுத்துகிறது. சிக்கலுக்கு விடை தேட முயல்கிறது.
காடுகளில் இனக் குழுக்கள் மோதல், குதிரை பயன்பாடு, ஆற்றைக் கடப்பதில் உள்ள இடர்பாடுகளை பேசுகிறது. காட்டு வாழ்க்கையில் குழந்தையை ஓநாய் துாக்கி போவது, குழு தலைவராக பெண் பொறுப்பேற்று இருப்பது போன்ற விபரங்கள் உள்ளன. மருத்துவம் செய்யும் ஆதிவாசி மனிதனின் அறிவுத் திறத்தை போற்றும் வகையில் உள்ளது. புதிய உலகத்திற்கு அழைத்துச் செல்லும் நாவல்.
– முகிலை ராசபாண்டியன்