நெசவுத் தொழில் சார்ந்த கலைச்சொற்களை ஆய்வு செய்து தொகுக்கப்பட்டுள்ள நுால். நெசவுத் தொழிலில் புழக்கத்தில் இருந்து அழிந்த, திரிந்த, நிலைத்த மற்றும் கலப்புச் சொற்கள் விபரம் தரப்பட்டுள்ளது.
நெசவில் பன்மொழி மக்களின் கலப்பால் பேச்சு வழக்கில் உலவிய இனச்சார்பு, மொழிச்சார்பு, சமூகச் சார்புச் சொற்கள், மொழியியல் நோக்கில் ஆராய்ந்து விளக்கப்பட்டுள்ளன. பேச்சு வழக்கும், அதற்கு மூலமான துாய சொற்களும் கண்டெடுத்து தரப்பட்டுள்ளன. உபகரணங்கள் சார்ந்த ஏராளமான சொற்கள் பட விளக்கத்துடன் பதிவு செய்யப்பட்டுள்ளன. கலைச்சொற்கள் அகர வரிசையில் பட்டியலிடப்பட்டுள்ளன.
அகராதியாக்க அணுகுமுறையில் பெயர், வினை என்ற பகுப்பில் விளக்கி, ஒலிபெயர்ப்பியல் குறியீடுகள் தந்திருப்பது சிறப்பு. வெடிப்பொலி, மூக்கொலி, மருங்கொலி போன்றவற்றை பட்டியலிட்டு பிற்சேர்க்கையாகத் தரப்பட்டுள்ளது. சொல் ஆய்வாளர்களுக்கு உதவும் நுால்.
– கவிஞர் மெய்ஞானி பிரபாகரபாபு