பாச வலையில் சிக்கிய பாட்டி எழுதிய பாடல்களின் தொகுப்பு நுால். பேத்தியை பாராட்டி, 10 பாடல்கள் உள்ளன. குடையை பற்றிய பார்வை பலவிதமாக உள்ளன. மழை, வெயில் மனம் விரும்பாத மனிதர்களை பார்க்காமல் இருத்தல் மற்றும் துாசி தவிர்க்க என ஒவ்வொன்றும் ஒவ்வொரு கோணத்தில் அமைந்துள்ளன.
வீட்டிலேயே தேவதையாக பேத்தி இருக்க, கோவிலுக்கு ஏன் போக வேண்டும் என கேள்வி எழுப்பியுள்ளார். நல்ல கேள்வி. பக்கத்தில் இருந்தாலும் பார்த்துக் கொள்ள முடியவில்லை கண்கள் என்பது நிதர்சனம். உள்வாங்க வேண்டிய பாடல்களின் தொகுப்பு நுால்.
– சீத்தலைச் சாத்தன்