நாட்டு மக்களுக்கு வானொலியில் பிரதமர் ஆற்றிய, ‘மன்கி பாத்’ என்னும் புகழ்பெற்ற உரையின் தமிழாக்க நுால். இதில், 2019 ஜூலை முதல், 2020 செப்டம்பர் வரை ஆற்றிய 15 உரைகளின் தொகுப்பு இடம் பெற்றுள்ளது.
இந்தியா வல்லரசாக, பசி, பட்டினியால் உயிரிழப்புகள் இல்லாத நிலையை எட்ட, சர்வதேச அளவில் இந்திய மதிப்பை, அந்தஸ்தை உயர்த்த எடுத்து வரும் முயற்சிகள், திட்டங்கள் பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் உள்ளது.
புற்றுநோயை வென்ற பிஞ்சு குழந்தைகள், ‘சந்திரயான் – 2’ விண்ணில் ஏவிய நிகழ்வு, காந்தியடிகளின் வாழ்க்கை, தேர்வு எழுதும் மாணவர்களுக்காக வெளியிட்ட ‘எக்ஸாம் வாரியர்ஸ்’ என்னும் புத்தகம் பற்றிய கருத்து பகிர்தல், சுற்றுலாவை மேம்படுத்தல், ஒற்றுமையின் முக்கியத்துவம் என பல பொருட்கள் பற்றிய விபரம் உள்ளது.
இளைஞர்களின் ஆற்றலை பயன்படுத்துவது, நீர் சேமிப்பு, நீர் பாதுகாப்புக்கான ஜலசக்தி திட்டம், கொரோனா காலத்திலும் முன்னேற்றத்துக்கு புதிய வழிமுறைகளை ஏற்படுத்தியது பற்றி விளக்கப் பட்டுள்ளது. இந்தியாவை உயர்த்திப் பிடிக்க பாடுபடும் பிரதமர் மோடியின் எண்ணங்களை பிரதிபலிக்கும் நுால்.
– புலவர் சு.மதியழகன்