அடர்காட்டில் வீரமங்கை வில் வித்தை, குதிரையேற்றம், வேட்டை என வாழ்ந்து வருகிறாள். எதற்கும் அஞ்சாத தீரமும், தாளாத பார்வையும் கொண்ட அவளின் மனதில், ஒருவரை கண்டதும் திடீரென ஏற்பட்ட மாற்றத்தை சொல்லும் நுால்.
கொள்ளையர்களை துரத்தியடிக்கும் பெண், ஒருவனின் அன்பை பெற தவியாய் தவிக்கிறாள். அப்போது நிகழும் உரையாடல் சுருக்கமாக, சுவையாக கவிதை நடையில் வார்க்கப்பட்டு உள்ளது.
‘துயில்கலைந் தெழுந்த நாகத்தைப் போல அயர்வுற்று உயிர்த்தன அகத்தின் உணர்வுகள்; இருளைப் பரப்பும் இரவை நிலவு கரைப்பது போலேக் கரைந்தது நீயே; மலரடி பட்ட மண்ணும் கூட களிப்பில் மெல்லக் கனிந்ததை உணர்ந்தேன்’ என்பது போல் அழகிய சிந்தனை விரவிக் கிடக்கிறது.
– சையது