இறைவனிடம் கொண்டுள்ள பக்தியும், புரிதலும் தான் கஜேந்திர மோட்சம் என்று, நிகழ்ச்சிகளைச் சுட்டிக்காட்டி விளக்கும் நுால். ஆதி மூலமே என்று அழைத்த கஜேந்திரனுக்கு மோட்சம் அளித்தது போல, பகவானை நம்பி அழைத்தவருக்கு, நிச்சயம் அருள் செய்வான் என்பதை, ‘நம்பினார் கெடுவதில்லை; இது நான்கு மறை தீர்ப்பு’ என்ற முத்தான வாக்கியம் வழி விளக்கி உள்ளது.
பக்தியின் உச்சம் துவங்கி, கஜேந்திர மோட்ச சுலோகமும், விளக்கமும் 10 தலைப்புகளில் இடம் பெற்றுள்ளன. சமஸ்கிருத சுலோகங்களும், அதற்கு தமிழ் அர்த்தமும் தரப்பட்டுள்ளன பக்தி மணம் கமழும் நுால்.
–
பேராசிரியர் இரா.நாராயணன்