‘மரணத்தைக் கண்டு அஞ்சாதவர்களும் இல்லை; அதை வரவேற்பவர்களும் இல்லை’ என்ற உண்மையை ஆதாரங்களுடன் விளக்கும் நுால். திருக்கடவூரில் வாழ்ந்த அருளாளர்களில் குங்கிலியக் கலய நாயனார், காரி நாயனார் போன்ற மகான்கள் பற்றிய குறிப்புகளை தருகிறது. தனம், கல்வி, நல்ல மனம், நல்ல இனம், உலகில் நல்லனவற்றை அம்பிகை நல்குவாள் என நம்பிக்கை உண்டாக்கப்பட்டு உள்ளது.
திக்கற்று நின்ற மார்க்கண்டேயருக்கு திருக்கடவூர் இறைவன் அருளினார். சரபோஜி மன்னரின் கோபத்தால் அக்னி குண்டத்தில் உயிர் போக நின்ற தருவாயில் அபிராமி பட்டருக்கு அமாவாசையன்று, நிலவை வரவழைத்த விதி விளக்கப்பட்டுள்ளது. துன்பக் கடலைக் கடக்க உதவும் நுால்.
– பேராசிரியர் இரா.நாராயணன்