திருக்குறளை தீவிரமாக ஆராய்ந்து, கருத்துக்களை பல கோணங்களில் வெளிப்படுத்தும் கட்டுரைகளின் தொகுப்பு நுால். மொத்தம், 20 கட்டுரைகள் உள்ளன. திருக்குறளில் உள்ளுறையாக அமைந்திருக்கும் உண்மைகளை கருத்தியல் ரீதியாக வெளிப்படுத்துகிறது. திருக்குளில் அரசியல் என துவங்கி, வள்ளுவர் கண்ட காமம் என்பது வரை பல்வேறு தலைப்புகளில் அமைந்துள்ளன. அவை சிந்தனையின் தீவிரத்தை எளிமையாக வெளிப்படுத்துகின்றன.
குறள் பற்றி ஆழ்ந்து சிந்திப்போருக்கு துாண்டுகோலாக உதவும் நுால். – ஒளி