குருவாயூரப்பன் பெருமையும், பக்தர்களுக்கு அருள் புரிந்த நிகழ்வுகளும் நிரல்படத் தரும் நுால். எட்டு தலைப்புகளில் விரிவான தகவல்களைத் தருகிறது. நினைவிழந்த நிலையில் மருத்துவரால் கைவிடப்பட்டவர் பழைய நிலைக்கு திரும்பியதை, ‘தாயுமானவன்’ என்ற கட்டுரை விளக்குகிறது. நாராயணீயத்தில் கூறப்பட்ட மகிமைகளை சுருக்கமாக விளக்குகிறது.
தாயின் கருணை போல நாராயண பட்டத்திரிக்கு இறைவன் அருளியதை பதிவு செய்துள்ளது. பெண்ணுக்கு குருவாயூரப்பன் அருளிய விதம் கதை வடிவில் கூறப்பட்டுள்ளது. நாராயணனை வழிபட்டால் துன்பங்கள் விலகும் என்ற நம்பிக்கை தரும் நுால்.
– பேராசிரியர் இரா.நாராயணன்