ஊர்வன, பறப்பன, நீந்துவன கேள்வி கேட்பது போல் கதை அமைத்து, ஆங்காங்கே கருத்துக்களை உதிர்த்துள்ள நுால். காகத்திடம் கிளி, ‘ஏன் இவ்வளவு கறுப்பாக இருக்கிறாய்...’ என கேட்கிறது. அதற்கு பதிலாக, ‘இறைவன் படைப்பில் கறுப்பாக பிறந்ததற்காக கவலைப்படவில்லை. அழகாக பிறந்த நீ பெருமைப்பட வேண்டியது தானே... அதற்காக ஏன் அடுத்தவரை இழிவாக பார்க்கிறாய். அதுவும் ஆறு அறிவு படைத்த மனிதர்களைப் போல...’ என்று குறிப்பிட்டிருப்பது சரியான சூடு.
இழி குணங்களை எதிர்த்து துணிவோடு நின்ற ஜீவராசிகளை பற்றி படித்தால், மற்றவர்களை மதிக்கும் தன்மை தானாகவே வளரும்.
– சீத்தலைச் சாத்தன்