நாடகம் நசிந்து வரும் நிலையில் கோவையில் நாடகக் குழுவைத் துவங்கி, 50 ஆண்டுகளாக நாடகங்களை இயக்கியும், நடித்தும் வரும் கே.எஸ்.கிருஷ்ணனின் வரலாற்றுப் பதிவு நுால். மலையாளத்தைத் தாய்மொழியாகக் கொண்டவர். மெல்ல தமிழைக் கற்று சரியான உச்சரிப்போடு வசனம் பேசும் ஆற்றல் உடையவர். நடிக்க வாய்ப்பு தேடி சென்னை வந்தார்; அவமானங்களைச் சந்தித்து மீண்டும் கோவை திரும்பினார்.
நண்பர்கள் ஒத்துழைப்போடு நாடகக் குழுவை துவங்கி இயக்குவது மட்டுமின்றி, நாயகனாக குணச்சித்திரம் மற்றும் நகைச்சுவை வேடங்களில் மிளிர்ந்தார்.
கோவை மட்டுமில்லாது பிற நகரங்களிலும் அரங்கேற்றி வெற்றி கண்டவர். ஐம்பதுக்கும் மேற்பட்ட நாடகங்களை இயக்கி நடித்துள்ளார்; இருபதுக்கும் மேற்பட்ட விருதுகளைப் பெற்றுள்ளார். நாடகத்தின் நுணுக்கங்களை நன்கு அறிந்த இவரது கலைப் பயணம் பற்றி எழுதப்பட்டுள்ள நுால்.
– புலவர் சு.மதியழகன்