ஓலைச் சுவடியிலிருந்து எடுத்து எழுதப்பட்ட வைத்திய நுால். மணி, மந்திரம், அவுஷதம் என்ற நிலைகளிலும் நோய் நீக்கும் வழிமுறை கூறப்பட்டுள்ளது. சித்தர்களின் பாடல் பதிவு செய்யப் பட்டுள்ளது.
மந்திரம், மாந்திரீகம், மூலிகை மருந்து, யந்திர சக்தி ஆகிய பழைய முறையில் நிவர்த்தி செய்யக்கூடிய மாந்திரீக ஆருடங்கள் ஏட்டு பிரதிகளிலிருந்து எடுத்து அச்சிடப்பட்டுள்ளது.
தாமிர உலோகத்தால் செய்ய வேண்டிய யந்திரமும், அவற்றுக்குரிய மந்திரமும் கூறப்பட்டுள்ளன. மந்திரங்களை எத்தனை முறை எப்படி உச்சரிக்க வேண்டும் என்ற வழிமுறைகளும் கூறப்பட்டுள்ளன.
கொடிய விஷத்தால் பாதிக்கப்பட்டவர்கள், பேய், பிசாசுகளால் பீடிக்கப்பட்டவர்கள், துன்பங்கள் நீங்கி வாழவும், சகல விஷங்களும் இறங்குவதற்கு மூலமந்திரங்களுடன் ஒன்பது வகை ஆரூடங்களும் தரப்பட்டுள்ளன.
எலி, நாய், பூரான், தேள் தீண்டிய விஷத்திற்கு, மூலிகைகளைக் கொண்டு மருந்து தயாரிக்கும் முறையும், மருந்தை உண்ண வேண்டிய முறையும் தரப்பட்டுள்ளன. மருந்து உண்ணும் நேரங்களில் தவிர்க்க வேண்டிய உணவு முறைகளையும் விரிவாகக் கூறியுள்ளது இந்த நுால்.
– புலவர் இரா.நாராயணன்