பாட்டியைக் கதைசொல்லியாகக் கொண்டு அமைந்த நுால். குழந்தை முதல் பெரியவர் வரை கதை கேட்டல், சொல்லல் என்ற வகையில் மகிழ்ச்சி, ஆசை, ஆவல் கொள்ளும் வகையில் அமைந்துள்ளது.
குழந்தைகள், இளைஞர்கள், பெரியவர்கள் எனப் பலரையும் கதை, நாவல், புராணம், நாடகம் என வசப்படுத்தி சமூகக் கருத்துக்களை கூறுவனவாக அமைந்து உள்ளன.
மகாபாரதம், ராமாயணம், பாட்டி வடை சுட்ட கதை, சினிமா போன்ற பல வடிவங்களைக் கொண்டு கதைகள் அமைகின்றன. ஒரு கதை தரும் பரவசம்; மனித உணர்வுகளை பல்வேறு பரிமாணங்களை கதையில் சுட்டிக் காட்டுகின்றன.
– முனைவர் இரா.பன்னிருகைவடிவேலன்