சைவம் வளர்த்த அருளாளர்கள் குறித்த கட்டுரைகளின் தொகுப்பு நுால். துறையூர் ஆதீனம் கண்ட ஆதி சிவப்பிரகாசர், திருவாவடுதுறை ஆதீனம் கண்ட நமச்சிவாய மூர்த்தி, திருப்பனந்தாள் காசி மடம் கண்ட குமரகுருபரர், திருப்போரூர் ஆதீனம் கண்ட சிதம்பர சுவாமிகள், பேரூர் ஆதீனம் கண்ட சாந்தலிங்க அடிகளார், சிரவை ஆதீனம் கண்ட ராமானந்த அடிகள் பற்றிய விளக்கங்களுடன் 16 கட்டுரைகள் உள்ளன.
இசைத் தமிழுக்கு கீர்த்தனை என்ற மரபை துவக்கி வைத்தவர் சீர்காழி முத்துத்தாண்டவர் என்ற குறிப்பு உள்ளது. ஆங்கில ஆட்சியை எதிர்த்துப் போராடிய முதல் விடுதலைக் கவிஞர் வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகளின் எழுத்தாணி இன்றும் பாதுகாக்கப்படுகிறது. இது மாதிரி அபூர்வ செய்திகள் அடங்கிய புத்தகம்.
– சீத்தலைச் சாத்தன்