உழவுத் தொழிலைப் பற்றி, இயல்பு, இயற்கை வேளாண்மை, நில மேலாண்மை என்று 37 பகுதிகளாக பிரித்து கவிதை வடிவில் பாடப்பட்டுள்ள நுால். குறட்பா, ஆசிரியப்பா, எண்சீர் விருத்தம் என்ற இலக்கண பாக்களில் அமைந்துள்ளது. ‘ஒரு தொழிலும் செய்யாது, உழைப்பே இன்றி உணவு உண்ணும் மனிதரெல்லாம் கள்வரை ஒப்பர்’ என்று பாடும்போது அறச்சீற்றம் தெரிகிறது.
பெரிய பணி வாய்ப்பு தருவது உழவுத் தொழில் தான் என்பதையும் ஆணித்தரமாகச் சொல்கிறது. நில மேம்பாடு, விதைப்பு, வளர்ப்பு, அறுப்பு, விற்பனை என அதில் எத்தனை உள்ளன என்பதை விவரிக்கிறது.
– சீத்தலைச் சாத்தன்