இலக்கியங்களில் உள்ள கருத்துக்களை திருக்குறளோடு ஒப்பிட்டு விளக்கம் தரும் நுால். பெரும்பாலான கட்டுரைகளின் தொடக்கமே திருக்குறளை மையமாகக் கொண்டுள்ளன. தவம் என்ற கட்டுரையில் தவத்தின் இலக்கணம் கூறப்பட்டுள்ளது.
மாணிக்கவாசகரின் திருவாசகம், ‘தவம் செய்தால் ஊன் உருகும்; உள்ளொளி பெருகும்’ என்ற தகவலைத் தருகிறது. உழவுத் தொழிலின் ஒப்பற்ற மேன்மையை ‘உழவே தலை’ கட்டுரை விளக்குகிறது.
‘உணில் உண்க’ என்ற தலைப்பு, மது உண்ணக் கூடாது என்ற கருத்தை வலியுறுத்துகிறது. இளைஞர்களை நல்வழிப்படுத்துவதாக அமைந்துள்ளது. வள்ளுவர் கூறிய கருத்துக்களை இலக்கியங்களோடு ஒப்பிட்டு விளக்கம் தந்திருப்பது அருமை. திருக்குறளில் அறக் கருத்துக்களை அறிவுரையாகத் தரும் நுால்.
– பேராசிரியர் இரா.நாராயணன்