வரலாற்று ஆர்வத்தால் தடயங்களை தேடிக் கண்டறிந்து, ஆதாரங்களை திரட்டி எழுதப்பட்டுள்ள அரிய வரலாற்று நுால். குழுவாக சேகரித்த தகவல்கள் முறைப்படி தொகுக்கப்பட்டு உள்ளன. வரலாற்றை பறை சாற்றும் கல்வெட்டுகள், நடுகற்கள், கோட்டைகள், கற்திட்டைகள், கல்வட்டங்கள், பாறை ஓவியங்கள் முறையாக படங்களுடன் பதிவு செய்யப்பட்டுள்ளன.
கிருஷ்ணகிரி மாவட்ட வரலாற்றுத் தடயங்களை ஆய்வு செய்து, உரிய ஆவணங்களுடன் தொகுத்து தருகிறது. எளிமையான மொழி நடையில் தகவல்கள் தரப்பட்டுள்ளன. முதலில் ஓசூர் சந்திரசூடேஸ்வரர் கோவில் வரலாற்று பின்னணியை, உரிய ஆவணங்களுடன் தெரிவிக்கிறது. படங்கள் தெளிவாக தரப்பட்டுள்ளன.
கிராமங்களில் நிற்கும் நடுகற்கள், அவற்றின் பின்னணி சார்ந்த வரலாற்று செய்திகளை பின்புலத்துடன் தருகிறது. தகவல் தேடும் குழு பயணங்களை படத்துடன் விவரிக்கிறது. மண்ணின் வரலாற்றை மாற்றுப் பாதையில் மனதில் பதிய வைக்கும் நுால்.
– அமுதன்