அரசியல் சிக்கல்களுக்கான தீர்வுகளை நோக்கி, பொதுமக்களின் சிந்தனையைத் துாண்டும் வகையில் அமைந்த நேர்காணல்களின் தொகுப்பு நுால். மேலை நாடுகளின் வல்லமையையும், முதலாளித்துவத்தையும் கூர்மையாக விமர்சிக்கும் வீச்சுடன் உள்ளது. உலகளாவிய தகவல்கள் இடம் பெற்று உள்ளன.
ஆப்கானிஸ்தான் பழங்குடிகளின் வாழ்க்கை முறைகள், இலக்கியங்கள், பாலஸ்தீனம் மற்றும் இஸ்ரேலின் அரசியல் நிலைகள், சீனாவின் நிலவியல் சார்ந்த எழுச்சிகள், சீனா மற்றும் ரஷ்யாவில் நடந்த புரட்சிகள், சோவியத் சிதறல் தாக்கங்களைத் தெளிவாகத் தெரிவிக்கின்றன.
உலக நாடுகளின் அரசியல், பொருளாதாரம், கலாசாரம் மற்றும் ஊடகச் செயல்பாடுகள் மீதான தாரிக் அலியின் பார்வை, புதிய சிந்தனையை துாண்டுகிறது. மக்களாட்சி என்பது வெற்றுச் சடங்குகள் கொண்டதாக அமைக்கப்பட்டுள்ளது. மக்கள் மேம்பாடு வெகுவாக பின்தங்கி உள்ளதாக கூறும் நுால்.
– கவிஞர் மெய்ஞானி பிரபாகரபாபு