தமிழ் எழுத்துச் சீர்திருத்தத்தையும், எளிமையாக உச்சரிக்கும் முறைகளையும் கூறும் நுால். உயிர் எழுத்தில் குறில் எழுத்துக்கள் அப்படியே ஏற்கப்பட்டுள்ளன. உயிர் நெடில் என்பதை மாற்றம் செய்து, சீரமைப்பிற்குப் பின், ‘அா’ என துணைக்கால் இட்டு நெடிலாக சீரமைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு உயிர் எழுத்துக்கள் சீரமைத்து காட்டப்பட்டு உள்ளன.
தமிழ் எழுத்துக்களுக்கு குறியீடு உருவாக்கி காட்டப்பட்டுள்ளது. தமிழ் எழுத்துக்கள் முழுவதையும், 28 குறியீடுகளில் சுருக்க முடியும் என்று குறிப்பிடுகிறது. நடைமுறையில் உள்ள எழுத்து அட்டவணையும், புதிய குறியீட்டு அட்டவணையும் தரப்பட்டு விளக்கம் தரப்பட்டுள்ளது.
வள்ளுவர் காலத்திய எழுத்து வடிவம் இன்று இல்லை. ஆனால், திருக்குறள் மாற்றம் இல்லாமல் அப்படியே ஏற்கப்பட்டுள்ளது. தொல்காப்பியர் காலத்தில் இருந்த எழுத்து வடிவம் சில மாற்றங்களுக்குப் பின் ஏற்கப்பட்டுள்ளது.
சீர்திருத்த எழுத்து முறையை ஒட்டு மொத்தமாக அறிமுகம் செய்து, நடைமுறைப்படுத்துவது சாத்தியமாகுமா என்று ஆராய்கிறது. தமிழ் மொழியில் எழுத்துச் சீர்திருத்தம் வேண்டுவோர் படிக்க வேண்டிய நுால்.
– புலவர் இரா.நாராயணன்