முகப்பு » ஆன்மிகம் » குந்தியின்

குந்தியின் குருசேத்திரம்

விலைரூ.275

ஆசிரியர் : விஜயராஜ்

வெளியீடு: பூவரசு பதிப்பகம்

பகுதி: ஆன்மிகம்

ISBN எண்:

Rating

பிடித்தவை
முதன்மை இதிகாசமான மகாபாரதத்தின் கதாநாயகியாக திகழ்ந்தவர் குந்தி தேவி என விளக்கும் நுால். அவரின் பங்களிப்பு இல்லையென்றால், காவியமே உருவாகி இருக்காது என உரைக்கிறது.

துர்வாசர் தந்த வரத்தால், திருமணத்துக்கு முன்னரே கர்ணனைப் பெற்றெடுத்தார் குந்தி; திருமணம் ஆகியும், கணவர் பாண்டு சாபத்தால் குழந்தை பெற இயலாது என்று அறிந்து, அரசியல் வாரிசுக்காக அதே வரத்தால் தர்மன், பீமன், அர்ச்சுனன் ஆகியோரை பெற்றார்.
அதே வரத்தால் நகுலன், சகாதேவனை பெற்றெடுக்க காரணமாய் இருந்தார். கணவன் இறந்ததால் நாட்டை இழந்தார்; மகுடத்தை இழந்தார்; மகாராணி பட்டத்தையும் இழந்தார்.

இத்தனை இழப்புகளுக்கு பின்னும் காத்திருந்தாள். பாரதப்போர் துவங்கியதும் வெற்றி பெற, கண்ணன் தந்திரத்தால் கர்ணனிடம் துாது சென்றாள். இரண்டு வரங்களைப் பெற்றார்; போரில் வெற்றி பெற்றார். இழந்த அனைத்தையும் மீட்டார். இவ்வாறு குந்தி தேவி என்னும் வீரப் பெண்ணின் வரலாற்றை உரைக்கிறது. மகாபாரதக் கதையைச் சுருக்கமாக ஒரு சாராம்சத்தை அறிந்து கொள்ள உதவும் நுால்.

புலவர் சு.மதியழகன்

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us