குடும்பத்தின் மூன்று தலைமுறைகளை பற்றிய நாவல். ஒவ்வொரு தலைமுறையும், முந்தைய தலைமுறையிடம் இருந்து எவ்வாறு வேறுபட்டு சிந்திக்கிறது, செயலாற்றுகிறது; இதனால் நேரும் சச்சரவுகளை எப்படி எதிர்கொள்கிறது என்பதை, பாசச் சாந்தாய் குழைத்துச் சொல்லி உள்ளது.
இவற்றின் ஊடே, ஆழ்மனதின் பேராற்றல் எத்தகையது, பிரார்த்தனை பலம் எவ்வளவு அடர்த்தியானது என்பதையும் எடுத்துக்காட்டுகிறது. தலைமுறைகளாய் கடத்த வேண்டியது செல்வம், அதிகாரமில்லை; பாசமும் நேசமும் விசால மனப்பாங்கும் தான் என உணர்த்தும் நுால்.
–
பெருந்துறையான்