வேளாண் உயிரியல் தொடர்பான 13 கட்டுரைகளின் தொகுப்பு நுால். இதில் உள்ள கட்டுரைகள், புனைவுத் தன்மையை வெளிப்படுத்துகின்றன. புனைவு, மொழியில் வெளிப்பட்டாலும் கருத்துகள் துல்லியத்துடன் சொல்லப்பட்டுள்ளன.
இலங்கைக்கு முருங்கை முதன்முதலில் இந்தோனேஷியாவிலிருந்து அறிமுகம் ஆனது என்பதும், ரயிலில் கட்டுக்கட்டாக முருங்கைக்காய் கொண்டு செல்லப்பட்டதும் எடுத்துக் காட்டப்பட்டுள்ளன.
கோவில் கோபுரக் கலசங்களின் உள்ளே வரகு நிரப்பப்படும் என்பதையும், அது இடியைத் தாங்கும் ஆற்றல் கொண்டது என்பதையும் வரகு மான்மியம் என்ற புனைவுக் கட்டுரை எடுத்துரைக்கிறது.
ஒவ்வொரு கட்டுரைக்கும், சிறுகதைத் தலைப்பைப் போல் கொடுத்துள்ளது ஆர்வமூட்டுகிறது. இவரது உயிரியல் தொடர்பான சிந்தனை வித்தியாசமானது. கதை சொல்வது போல் சுவையுடன் ஆங்காங்கே பல அறிவியல் வரலாற்றுச் செய்திகளைத் தெளித்துள்ளது சிறப்பு. கதை போல் அமைந்துள்ள கட்டுரைகளின் தொகுப்பு நுால்.
–
முகிலை ராசபாண்டியன்