உழைப்பின் மகத்துவத்தை சொல்லும் கவிதைகளின் தொகுப்பு நுால். வெற்றி, தன்னம்பிக்கை, மன அமைதி, மரங்கள், மன உறுதி உள்ளிட்ட, 65 தலைப்புகள் உள்ளன. மனசாட்சியற்ற மனிதர்களை, கவிதை வரிகளால் அடையாளம் காட்டுகிறது. அதேபோல், விளையாத நிலங்களை பொன்னாக்குவோம் என தன்னம்பிக்கை ஊட்டுகிறது.
வெற்றி, தோல்வி, கையாளும் முறையை கற்றுக் கொடுக்கிறது. உதவும் மரங்களை எப்படி பாதுகாக்க வேண்டும் என கூறுகிறது. மூட நம்பிக்கைகளை ஒழித்து, மனதில் உறுதி வேண்டும் என்கிறது.
படிப்பின் அவசியத்தை உணர வைக்கிறது. சொல்லும் செயலும் ஒரே கோட்டில் இருக்க வேண்டும் என்கிறது. விவசாயம், மனிதர்களை உயிர்ப்புடன் வைத்திருப்பதால், அதன் மீது, அளவு கடந்த காதல் வைத்திருக்க வேண்டும் என உணர வைக்கிறது. ஒவ்வொரு கவிதையும் சமூக பொறுப்புடன் படைக்கப்பட்டுள்ளது.
–
டி.எஸ்.ராயன்