குடியுரிமை, பேச்சுரிமை, எழுத்துரிமை பற்றி திருக்குறள் கருத்துகளை எடுத்துக் கூறும் நுால். அரசியல் உரிமைப்படி வாழும் நாட்டில் நல்லாட்சி நிலவ வேண்டும் என்ற எதிர்பார்ப்பை செங்கோன்மை என எடுத்துரைத்துள்ளார் வள்ளுவர். அனைவரும் சமநிலை பெற வேண்டும் என்ற நோக்கில் அரசியல் உரிமை அமைந்துள்ளது.
அதில் பேதம் ஏற்படும்போது, ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்ற சமநிலையை எடுத்துரைத்துள்ளார். முறையான நீதி கிடைக்க மன்னராட்சிக் காலத்திலேயே வற்புறுத்தியுள்ள உண்மையை எடுத்துரைக்கிறது. அடிப்படை உரிமையை அறிய விரும்புவோர் படிக்க வேண்டிய நுால்.
– முகிலை ராசபாண்டியன்