பார்த்தது, உணர்ந்தது, எண்ணியதை கலவையாக்கி படைக்கப்பட்ட கவிதை தொகுப்பு. மொத்தம், 69 தலைப்புகள் உள்ளன. காதல் வயப்படும் இளைஞனின் மீசை, தாடியை வர்ணிப்பது புதுமை. மனித ஏக்கத்தை, கரை ஒதுங்கிய அலை போல் அலசுகிறது. கணினி பயன்பாட்டையும், கடவுள் வழிபாட்டையும் பொருத்தி பார்க்கிறது.
காமராஜரை போல் தலைமை பண்பு ஏற்கும் தலைவர் என்கிறது. செடியை, கண்ணீர் மல்க பேச வேண்டும் என வலியுறுத்துகிறது. ஒற்றுமையின் எல்லைக் கோட்டை வரிசைப்படுத்துகிறது. பேருந்து பயணத்தின் மலர்ச்சியை கொண்டாடுகிறது. கணவனின் மனக்குறையை பேச முயல்கிறது. வாழ்க்கையில் உடைந்த கண்ணாடியை ஒட்டச் சொல்கிறது.
பாட்டிகளின் வாழ்வியலில் இருந்து பாடம் சொல்வது படிப்பை. குழந்தைகளுடன் ஓடி விளையாடி மகிழச் சொல்கிறது. கவிதைகளின் ஊடே வாழ்வியலை தேட முடியும்.
–
டி.எஸ்.ராயன்