பெருஞ்செயல், சான்றோர், நட்பு, தற்புகழ்ச்சி, வீரம், கலை, இசை, நாடு, சமுதாயம், பணம், ஏற்றத்தாழ்வு, விடுதலை, உலக அமைதி போன்ற 52 தலைப்புகளில், மரபு சிதையாமல் எழுதப்பட்டுள்ள கவிதை நுால்.
சான்றோர் மொழியின் சிறப்பு, நட்பின் இலக்கணம், தவிர்க்க வேண்டிய தீ நட்பு, எளிமையின் இனிமை, புகழ், தற்புகழ்ச்சி தவிர்த்தல், கலையால் நிலை உயரும் மனித வாழ்வு, வீரத்தின் பெருமை, திருக்குறளின் அருமை, ஒன்றே மனித இனம் ஆகிய பொருண்மைகளிலும் அணிவகுத்து நிற்கின்றன.
‘ஏற்றத் தாழ்வாம் விதியாள் கேட்டை, ஏறி மிதித்திடடா! ஊரை ஏய்த்தல் எதிர்த்திடடா! வேற்றுமை இங்கே நிலையென்று ஊழல், வேரோடு ஒழித்திடடா!’ என்று சீர்திருத்தம் பேசுகிறது. மண் வாசம் வீசும் மரபுக் கவிதை தொகுப்பு நுால்.
–
முனைவர் மா.கி.ரமணன்