கவிதை, நாவல், விமர்சனம், ஆய்வு, கலை இலக்கிய இயக்க செயல்பாடுகளில் தீவிரம் கொண்ட யாழினி முனுசாமியின் படைப்புகளில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதைகளின் தொகுப்பு நுால்.
உதிரும் இலை, தேவதையல்ல பெண்கள், மோகினியுடனான சாத்தானின் உரையாடல், சொல்லரவம் ஆகியவை தொகுக்கப்பட்ட கவிதைகள். பெண்ணியம், தமிழினம், தலித்தியம், நட்பு முறிவு உள்ளிட்ட பொருளை பேசுகிறது.
‘எப்போதும் வயதானவர்களாகவே இருக்கின்றனர். கல்லுாரி முதல்வர்கள்; ஒருபோதும் வயதாவதேயில்லை வகுப்பறைகளுக்கு மட்டும்’ என கல்விக்கூடங்களை கற்பிக்கிறது.
சொற்களில் கடுஞ்சொல் ஏற்படுத்தும் பக்க விளைவுகளை, சொற்கள் கவிதை பேசுகிறது. வாழ்க்கையில் புதிய களத்தை ஏற்படுத்த துாண்டும் கவிதை புதுமை. மாறுவேட அரசியல்வாதிகளை சாடுகிறது. ஒவ்வொரு கவிதையிலும், கருத்தியல், வாழ்வியல் புகுந்துள்ளது. வாசிக்க வேண்டிய நுால்.
–
டி.எஸ்.ராயன்