சீர்காழியில் 600 ஆண்டு களுக்கு முன் தோன்றிய அருளாளர் கண்ணுடைய வள்ளலார் இயற்றிய நுால். ஞானத்தால் விரைவாக முக்தி பெறலாம் என்ற மையக் கருத்தை கொண்டது. தத்துவங்களை முதலில் விளக்குகிறார். மதம் பிடித்த யானை கனவில், சிங்கம் வந்து அடக்குவது போல, சீடனின் ஆணவம், கன்மம், மாயையை அருட்கண் பார்வையால் சற்குரு போக்குவதாக அருளப்பட்டுள்ளது.
போலி குருக்களை தோலுரித்துக் காட்டுகிறது. உண்மை அறிவு பெறும்போது சீவனாகி, சிவம் ஆவதாகக் கூறுகிறார் மனித மனம். ஆன்மா, சிவத்துடன் கலப்பதே ஞான நிலை. மண், மலை, கடல், வானத்தை அளந்து அறிய முடியாது. அது போல் பரம்பொருளையும் அளிக்க இயலாது என்கிறது.
பேரம்பலத்தில் ஆடும் நடராஜர், சிற்றம்பலமாகிய ஆன்மாவிலும் நடனம் ஆடுகிறார் போன்ற வாசகங்கள் சிந்தனையில் ஆழ்த்தும். ஞானம் பெற வழிகாட்டும் ஆனந்தப் புதையல்.
–
முனைவர் மா.கி.ரமணன்