உள்ளத்தில் ஊற்றெடுத்த கருத்துகளை சொல்லும் கவிதை தொகுப்பு. ‘விண்ணுக்கு நிலவழகு’ முதல் ‘குரங்கும் வீர நடை போடும்’ என முடியும், 95 தலைப்புகளில் மனித இயல்புகளை படம் பிடித்துள்ளது.
காதலியை கனவில் கலந்தவளாக, சித்திரம் போல் சிரித்தவளாக வர்ணிக்கிறது. வல்லமை பெற்று வாழ வேண்டும் என வலியுறுத்துகிறது. நல்ல மனதுள்ள உள்ளம், என்றுமே உறங்காது; பாடல் மகிழ்ச்சி கடலில் அலைப்பாய வைக்கும்; பிறரிடம் இனிமையாக பழக வேண்டும் போன்ற கருத்துகளை கற்பிக்கிறது. ஆச்சரியப்பட வைக்கும் உலகின் வளர்ச்சி, நீங்கா இடம் பிடிக்கும் கொடிய வறுமை, முன்னேற்றத்திற்கு பயன்படும் அறிவு, மனதில் உறுதி கொள்ள வேண்டிய தேவைகளை கண்முன் கொண்டு நிறுத்துகிறது. கவிதை எழுத முயற்சிப்போருக்கு பயன்படும் நுால்.
–
டி.எஸ்.ராயன்