பொது வாழ்வில் அங்கம் வகிக்கும் ஊடகத்துறை குறித்து எழுதப்பட்டுள்ள நுால். வரலாற்று தகவல்களுடன், சட்ட ரீதியான வழிகாட்டுதலும் தொகுத்து தரப்பட்டுள்ளது. எழுதுகோல் என துவங்கி, இதழியல் பற்றி தெளிவாக தரப்பட்டுள்ளது. உலக நாடுகளில் பத்திரிகை வளர்ச்சி பற்றிய தகவல்களும் உள்ளன. இதழியல் சட்டங்கள் குறித்து பத்திரிகை அடிப்படை சட்டங்கள், பத்திரிகை பாதுகாப்பு சட்டம், அலுவலக ரகசியங்களை வெளியிடுவதை தடுக்கும் சட்டம், ஆபாச புத்தக தடை சட்டம் என பலவற்றை குறித்தும் தனித்தனி கட்டுரைகளில் விளக்கப்பட்டுள்ளது.
பல்வேறு பொருண்மைகளை மையமாக கொண்டு வெளிவரும் இதழ்கள் பற்றிய குறிப்புகள் உள்ளன. பத்திரிகை துறையின் சேவை, அதனால் மக்களுக்கு ஏற்படும் நன்மைகள், நாட்டு வளர்ச்சியில் பத்திரிகைகளின் சேவை பற்றிய விபரங்களும் உள்ளன. இதழியல் குறித்து சுருக்கமாக அறிந்து கொள்ள உதவும் நுால்.
–
மதி