திருப்பதி திருமலை திருவேங்கடமுடையான், அலர்மேல்மங்கைத் தாயாரின் வரலாற்றை விரிவாகக் கூறும் நுால். ஸ்ரீ வேங்கடேச மகாத்மியம் என்ற புராணத்தை மையமாகக் கொண்டு, வாமன புராணம், மார்க்கண்டேய புராணம், பத்ம புராணம், கருட புராண துணையுடன் விரிவாக எழுதப்பட்டுள்ளது.
கலியுகத்தில் நித்ய கல்யாணம் பச்சைத் தோரணமாய் 365 நாளும் திருவிழா காண்கிறார் பெருமாள். மலைப் பாதையில் நடந்து மூலவர் எழுந்தருளிய ஆனந்த நிலையம், பொன் விமானத்தை தரிசிப்பதே ஆனந்த அனுபவம் என்கிறது.
சீனிவாசன் திருமணத்திற்காக குபேரனிடம் வாங்கிய கடனுக்கு சாட்சி கையெழுத்து போட்டது சிவனும், பிரம்மாவும் என கூறப்பட்டுள்ளது. வேங்கடேசரையும், வேங்கடமலையையும் விவரிக்கும் நுால்.
–
முனைவர் மா.கி.ரமணன்