பதினேழு வகை கதைகள் அடங்கியிருப்பதால் தொகுப்புக்குக் கதம்பம் எனப் பெயர் சூட்டப்பட்டுள்ளது. இதில், பாசத்திற்குப் பெயர் பைத்தியம், ஒரு கழுதைக்குக் கல்யாணம் என்பவை நாடகங்கள்.
முதல் நாடகம், தாயின் தியாகத்தை மையமாக வைத்துப் பின்னப்பட்டுள்ளது. காதலித்த பெண்ணைத் திருமணம் செய்வதற்கு இடையூறாக இருந்த தந்தையின் பணத்தாசையை உணர்த்தும் வகையில் ஒரு கழுதைக்குக் கல்யாணம் அமைந்துள்ளது.
ஏதோ ஒரு வகையில் பெண்ணின் வாழ்க்கையைச் சீரழித்துக் கொண்டு தான் இருக்கிறான் ஆண் என்ற செய்தியை, ‘நிழல்களுக்கு நிறமில்லை’ என்ற கதை எடுத்துரைக்கிறது. அவள் – அந்த இரவு – இந்தியா என்ற கதையும் மூன்று வகை ஆண் கூட்டத்தில் சிக்கிய பெண்ணின் கண்ணீர்க் கதை. குடும்ப உறவுகளுக்கு இடையே ஏற்படும் சிக்கல்களையும், தீர்வுகளையும் எடுத்துரைக்கின்றன. எல்லா கதைகளும் விறுவிறு ரகம்; எளிய மொழி நடையுடன் உள்ளன.
–
முகிலை ராசபாண்டியன்