சமூகம், உறவு, வாழ்வியல், இயற்கையை அடிப்படையாக கொண்ட கவிதைகளின் தொகுப்பு நுால். மலையடிவாரத்தில், பொழியும் மழையை ரசித்து அதோடு பழகி வாழ்ந்த வாழ்க்கையில் கிடைத்த அனுபவம் படைப்பாகியுள்ளது.
‘ஒரு நிமிடம் முன்னால் பிறந்திருந்தால் நீ கூட தேவதை தான்’ என காதலை பேசுகிறது. ‘மேய்ச்சல் முடிந்து கட்டுத்தறிக்குப் போன மாடுகள் அசை போட்டன அன்று நடந்த நிகழ்வுகளை’ போன்ற வரிகள், உலகின் வாழ்வியலை கூறுகின்றன.
மதுவுக்கு, அடகு கடை போகும் குடம் குறித்த வரிழ, ஏழை பெண்களின் குமுறலை அலறுகிறது. மழைச்சாரலில் நனைய வைக்கிறது. உணர்வுகளை வெளி காட்டுகிறது. இப்படி, எளிய மொழி நடையில் படைக்கப்பட்டுள்ளன. கதை, கவிதை எழுத முயற்சிப்போருக்கு உதவும் நுால்.
–
டி.எஸ்.ராயன்