பதினெண் கீழ்க்கணக்கு நுால்களில், பழமொழிகளைத் தொகுத்து நீதியை போதிக்கும் வகையில், 400 பாடல்களைக் கொண்ட நுால். வாழ்க்கைக்கு தேவையான அறம் குறித்து அறிவுறுத்துகிறது. சுருக்கமாகவும் தெளிவாகவும் எளிய உரை அளிக்கிறது.
தொடக்கத்தில், மூல நுாலில் உள்ள வெண்பாவை குறிப்பிட்டு பொருள் கூறப்பட்டுள்ளது. அடுத்து, வெண்பாவில் வரும் பழமொழி அளிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து எளிய நடையில் சுருக்க விளக்கம் தரப்பட்டுள்ளது. சில அருஞ்சொற்களுக்கு பொருளும் கூறப்பட்டுள்ளது.
காலத்திற்கு ஏற்ப அணிநலன் விளக்கங்கள் உள்ளன. குறிப்பாக, நானுாறு வெண்பாக்களுக்கும் பொருத்தமான தலைப்புகள் அளித்துள்ளது சிறப்பு. இதன் வாயிலாக, அந்த நுாற்பாவின் பொருளை தலைப்புகள் வாயிலாகவே அறிய வகை செய்யப்பட்டுள்ளது.
இறுதியில் செய்யுள் முதல் குறிப்பு அகராதியும், பழமொழி முதல் குறிப்பு அகராதியும் அளிக்கப்பட்டுள்ளன.
–
முகில் குமரன்