மனதை இளமையாக வைத்துக் கொண்டால் வயதானாலும் இளமையாக வாழலாம் என்று கூறும் நுால். கையில் பிரம்பில்லாமல் கற்றுக்கொடுக்கும் ஒரே ஆசிரியர், புத்தகம் என்று படிப்பின் மேன்மையை எடுத்துரைக்கிறது.
அரசியல் சட்டம் நமக்கு வழங்கியுள்ள உரிமைகளை நினைவுபடுத்துகிறது. மனிதன் எப்படி வாழ வேண்டும் என்று தொடங்கி 28 கட்டுரைகளில் தருகிறது. மனிதனுக்கு உள்ள மூன்று குணங்கள், பிரச்னைகளால் உருவாகும் வாய்ப்புகள் உறவுகள் மேம்பட, மன அழுத்தத்திற்குப் பயிற்சி போன்ற பொருண்மைகளில் கருத்துகளைத் தருகிறது.
தன்னலமற்ற தொண்டு செய்து, மனநிறைவுடன் வாழ வழி கூறுகிறது. உழைத்து முன்னேற வேண்டும் என்பதை இளமைப் பருவம் என்னும் கட்டுரை சுட்டுகிறது. பணத்தைச் சம்பாதிக்க வேண்டும் என்பதற்காக ஒழுக்கத்தை விட்டுவிடக் கூடாது என்ற அறிவுரையை அறிவுரையாகத் தருகிறது. வயதானாலும் இளமையாக வாழ முடியும் என தவல்களைத் தரும் நுால்.
–
பேராசிரியர் இரா. நாராயணன்