வழிபாட்டில் மந்திரம், தந்திரம், எந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன. ஒவ்வொரு தெய்வத்துக்கும் தனியாக ஸ்ரீசக்கரம் உண்டு. அந்தந்த சிலைகளை பிரதிஷ்டை செய்யும் போது அதனடியில் அதை வைப்பது வழக்கம். ஸ்ரீ சக்கரத்தின் பகுதிகள், வடிவங்கள், சக்திகள், வரையும் முறைகள், கோணவியல் வழியாக விரிவாக விளக்கப்பட்டுள்ள நுால்.
ஒன்பது சக்திகள், 10 இந்திரியங்கள், ஐந்து ப்ராணங்கள், நான்கு கரணங்கள், ஐந்து பூதங்கள், 10 வாசனைகள் என, 43 முக்கோணங்கள் அமைய வரைய வேண்டும். ஆவர்ணம் என்றால் மறைப்பு என்று பொருள். அனைத்து மறைப்புகளும் நீங்கும் வரை வணங்குவது, ‘நவாவர்ண பூஜை’ ஆகும். ஒவ்வொரு ஆவரணமும் படங்களுடன் விளக்கப்பட்டுள்ளன.
நிறைவாக ஸ்ரீதேவி கட்கமாலா ஸ்தோத்திரமும், நவாவர்ண கட்கமாலா ஸ்தோத்திரமும் சப்த மாதர்கள் மற்றும் நித்திய தேவிகள் பற்றிய குறிப்புகளும் இடம் பெற்றுள்ளன. ஸ்ரீதேவியின் பரிபூரண ஆசியைப் பெ விழைவோர் படிக்க வேண்டிய நுால்.
–
புலவர் சு.மதியழகன்