சிறந்த ஆளுமை உடையோரைத் தேர்ந்தெடுத்து 10 பாடல்கள் வீதம் அந்தாதியாக பாடப்பட்டுள்ள நுால். எம்.ஜி.ஆர்., என்று துவங்கி அவர் குணங்களை எல்லாம் 10 வெண்பாக்களில் விளக்கிக் கூறுகிறது; கவிஞரின் கவித்திறனையும் விளக்குகிறது.
மூவேந்தர் ஆண்ட நாட்டை முறையாகக் கூறியுள்ளது. அவ்வையார் சொன்ன அமுத மொழிகள், தனித் தலைப்பில் தரப்பட்டுள்ளது. கம்பன், அப்துல்கலாம், ஆதிசங்கரர், விவேகானந்தர், காந்தியடிகள், நேரு, இந்திரா, அன்னை தெரசா பற்றி 10 நேரிசை வெண்பாக்கள் அலங்கரிக்கின்றன.
மரபுக் கவிதையில் வெண்பா எப்படி எழுத வேண்டும் என்ற இலக்கணத்தை கற்பிக்கிறது. கவிதையை நேசிப்போர் வாசிப்பை ஊக்கப்படுத்தும். அனைவரும் படிக்க வேண்டிய நூல்.
–
புலவர் இரா.நாராயணன்