குழந்தைகளின் செயல்பாடுகள் பற்றி அறிந்து செயல்பட, பெற்றோருக்கு வழிகாட்டியாக எழுதப்பட்டுள்ள நுால். குடும்ப உறவை மேம்படுத்த உதவும்.
‘இன்றைய பெற்றோர்’ என்ற தலைப்பில் துவங்குகிறது. பிள்ளைகள் இயல்பு மற்றும் பெற்றோரின் அணுகுமுறையை அலசி ஆராய்ந்து தகவல்களை தருகிறது. பிள்ளைகளின் மன வளர்ச்சிக்கு பெற்றோரின் அரவணைப்பு தேவை என்பதை சுட்டிக்காட்டுகிறது.
குழந்தைகளுக்கு அதிகமாக கட்டுப்பாடு விதித்தால் மீற வாய்ப்பு உண்டு என எச்சரிக்கிறது. இது போல, உறவை பேணும் வகையில், 31 அத்தியாயங்களில் தகவல்களை திரட்டி தருகிறது. இறுதியில், புத்தகம் வாசிப்பதால் ஏற்படும் மேன்மையை கற்றுக்கொடுக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துகிறது. குழந்தைகளுடன் உறவைப் பேண வழிகாட்டும் நுால்.
–
ஒளி