மாணவர், ஆசிரியர், அரசு ஊழியர், பிழைதிருத்துனர் என, தமிழ் மொழியை பிழையின்றி பயன்படுத்த விரும்பும் அனைவருக்கும் உதவும் வகையில் எழுதப்பட்டுள்ள இலக்கண நுால். தமிழ் இலக்கணத்தை எளிய நடையில் விளக்குகிறது.
ஓரளவு மொழி அறிந்தவர்கள் கூட இலக்கணம் கற்பதற்கு ஏதுவாக தயாரிக்கப்பட்டுள்ளது. இலக்கணத்தில் எழுத்து, சொல், யாப்பு பற்றி முழுமையான விபரங்கள் தெளிவாக தரப்பட்டுள்ளன. அணிகள் பற்றியும் விளக்கம் உள்ளது.
ஒவ்வொன்றும் தனித்தனி தலைப்புகளில் மிக எளிமையாக, புரியும் வகையில் விளக்கப்பட்டுள்ளது. இதில் தரப்பட்டுள்ள யாப்பு இலக்கணத்தை படித்தால், கவிதை எழுத துாண்டும்.
– ஒளி