சுவாரசியமாக வாசிக்க உகந்த வகையில் திருப்பங்களுடன் கூடிய சிறுகதை தொகுப்பு நுால். தற்கால சூழலை சித்திரமாக பதிவு செய்துள்ளது. எதிர்பாராத திருப்பங்களுடன் அமைந்த சிறுகதைகள் சுவாரசியம் தருகின்றன. வாசிப்புக்கு ஏற்ற வகையில் எளிய நடையில் உள்ளன.
முதல் கதை, ‘பில்டர் காபி அண்டு தோசா’ என்ற தலைப்பில் உள்ளது. அது, இன்றைய வாழ்க்கை முறையை கருவாக கொண்ட பாத்திரங்களால் உருவாக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, அவன் அவள் அது, நகரம், பொய்கை, அவன், கன்னுக்குட்டி காதல், ட்விஸ்ட், பெண் குழந்தை, மாரியம்மா, மேய்ப்பன் இல்லா ஆடு, மாய காதல் என்ற தலைப்புகளில் கதைகள் உள்ளன.
நவீன தொழில்நுட்ப திறனை சிலாகிக்கும் வகையிலான கதாபாத்திரங்கள். எளிமையாக மிகக் குறைந்த சொற்களில் அமைந்த உரையாடல்கள் கதையை நகர்த்துகின்றன; சிரமம் தராமல் காட்சிப்படுத்துகின்றன. சலிப்பு நீக்க உதவும் நுால்.
–
ராம்