பழந்தமிழர் வாழ்வோடு பின்னி பிணைந்திருந்த சடங்குகள், வழிபாடு, திருவிழா, உணவு பழக்கங்கள், விளையாட்டு போன்றவற்றை நுட்பமாக ஆராய்ந்து அரிய கருத்துகளை அள்ளித் தரும் நுால்.
மஞ்சள் மகிமை, தாலியின் சரித்திரம், பல்லாங்குழி, பெண் எனும் சுமைதாங்கி உட்பட பல கோணங்களிலான கட்டுரைகளை தாங்கியுள்ளது. பழந்தமிழர்களின் பழக்க வழக்கங்களில் ஒளிந்து கிடக்கும் உண்மைகளை ஆராய்ந்து தெளிவான உண்மைகளை முன் வைக்கிறது. சடங்கு தோன்றிய விதம், வழிபாட்டின் உண்மை நிலை பற்றி எல்லாம் விளக்கமாக தருகிறது.
வாழ்க்கை முறையில் இருக்கும் பவுத்த மத எச்சங்கள் குறித்தும் தகவல்களை திரட்டி தருகிறது. தமிழக கிராமங்களில் நிலவும் பேச்சு வழக்கின் அடிநாதம் குறித்தும் ஆய்வு செய்யப்பட்டுள்ளது. அவற்றின் வேர்கள் பற்றி விரிவான விளக்கத்தை தருகிறது. தமிழர்களின் பண்பாட்டு உயர்வை வெளிப்படுத்தும் நுால்.– மதி