‘சுதந்திரம் போல் சுய மரியாதையும் மனிதர்களின் பிறப்புரிமை. அடுத்தவரிடம் இருந்து இதை பறிக்கக் கூடாது; நாம் பறி கொடுக்கவும் கூடாது. இதுவே வாழ்வின் மகத்துவம்’ என்பதை வலியுறுத்தும் நுால்.
சுய மரியாதை குறித்து இஸ்லாம், நபிகள் அருளிய கருத்துக்களையும், அதன் முக்கியத்துவத்தையும் கட்டுரைகளாக தொகுத்துள்ளார். வசதி படைத்தவர்களைப் பார்த்து தாழ்வு கொள்வது பாவம்; மூதாதையர் என்பதற்காக அவர்கள் கருத்தை ஆராயாமல் ஏற்கும் மூடத்தனம், சுயமரியாதையை பாதிக்கும்; வழிபாடு துவங்கி பணம், புகழ், பதவி என எதையும் வெறிகொண்டு தொடர்வது இழிவு.
திட்டும் ஒருவரை திருப்பித் திட்டாமல் பதில் அளிப்பது; தெரியாததை தெரியாதென ஒப்புக் கொள்வது போன்ற செயல்களும் சுயமரியாதையின் வெளிப்பாடே என எடுத்துரைப்பதை மேற்கோள்களோடு தெரிவிக்கிறது.
–
மேதகன்