கொங்கு பகுதியைச் சேர்ந்த தீரன் சின்னமலை பற்றிய நுால். உண்மை நிகழ்ச்சிகளுடன் புனை கதைகளும் சேர்ந்து ஒன்றி விடச்செய்கிறது. வீரம், அரசியல் சூழ்ச்சிகள், காதல், குடும்பம் பொறாமைக்காரர்கள் என விறுவிறுப்பாக எழுதப்பட்டு உள்ளது.
ஆனைமலை காடுகளில் தேக்கு மரங்கள் அறுக்கப்பட்டு, ஐரோப்பிய நாடான இங்கிலாந்து, லண்டன் கொண்டு போய், மேஜை ஆக்கி, அதில் இந்தியர்களின் அடிமை சாசனம் எழுதப்பட்டது என சொல்லும் போது ஆக்ரோஷம் பொங்கும்.
எதிர்காலத்தைச் சொந்தமாக்க விரும்புபவர்கள், இழந்த காலத்தை நினைத்துக் கொண்டிருக்கக் கூடாது என்ற அறிவுரையை தருகிறது. இடையிடையே சின்னமலை கும்மி பாட்டுகள் வீரத்தை போற்றுகின்றன.
–
சீத்தலைச் சாத்தன்