உடல், மனதுக்கு இணைந்து சிகிச்சை அளிப்பதால் நோய்கள் முழுமையாக குணமாவதாக கூறும் நுால். மருத்துவ முறைகளைப் பின்பற்றும் விதமாக நியதிகள் வகுக்கப்பட்டுள்ளன.
அளவாக மென்று சாப்பிடுதல், பச்சை காய்கறிகள், பழங்கள், உடலை பலவீனப்படுத்துதல், வேகவைத்த உணவை உண்ணுதல், தாகம் எடுக்கும் போது தண்ணீர் அருந்துதல், பசித்து புசித்தல், மலச்சிக்கலை தவிர்த்தல், நல்ல காற்றோட்டம், பகல் துாக்கத்தைத் தவிர்த்தல், செவி, நாசி, வியர்வை துவாரங்கள் அடை படுவதால் ஏற்படும் ஒவ்வாமை, தகுந்த உடற்பயிற்சி, மன அழுத்தம் அகற்றுதலை கடைபிடிப்பதற்கான வழிமுறைகள் விளக்கப்பட்டுள்ளன.
இயற்கை மருத்துவ முறையை விளக்கும் நூல்.
– புலவர் சு.மதியழகன்