தொழில் அதிபராக பெற்ற அனுபவங்களை பின்புலமாகக்கொண்டு, புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்குவதற்கான வழிமுறையை சிந்தனையாக வெளிப்படுத்தும் நுால். பணி இடங்கள் உருவாக்குவதில் உள்ள சவால்களை அலசி தீர்வுக்கு வழி சொல்கிறது.
வறுமை விலக வேண்டுமானால், வேலை வாய்ப்புகள் பெருக வேண்டும். இந்த சிந்தனையை மைய கருவாக்கி, கோடிக்கணக்கான வேலைகளை உருவாக்குவதற்கு உரிய வழிமுறைகளை தேடுகிறது. அதை செயல்படுத்துவதற்கு உரிய வழிமுறைகளை அடையாளம் காட்டுகிறது.
வேலைவாய்ப்பு பெருகும் போது, மக்கள்வாழ்நிலையில் மாற்றங்கள் ஏற்படும். இதற்காக, விவசாயிகள், அரசியல்வாதிகள், கொள்கை வகுப்பாளர்கள், நிர்வாகிகள், நிதி நிறுவனங்கள் மற்றும் தொழில் முனைவோர் ஒருங்கிணைந்து செயல்படுவதன் அவசியம் பற்றியும் வலியுறுத்துகிறது. நாட்டின் வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்துக்கு ஆலோசனை கூறும் நுால்.
–
ஒளி