எண்ணம் துாய்மையாக இருந்தால், வாழ்க்கை அர்த்தம் உடையதாக அமையும் என உணர்த்தும் நுால். அகங்காரம் இருக்கும் வரை, நல்ல எண்ணங்கள் துளிர் விடாது. சோம்பல் சிந்தனைக்கு தடையாக அமையும் என, எதார்த்தத்தை கூறுகிறது. எந்த இடத்திலும், வார்த்தையில் பணிவு தேவை; தாழ்வு மனப்பான்மையை புறந்தள்ளி, நம்பிக்கை வாசலை தட்ட வேண்டும் என்கிறது.
பாராட்டும் குணம், நன்றி உணர்வு, மனித மனதை எடை போட வைக்கும். உயர்ந்த குறிக்கோளுடன் பயணிப்பது, தேடலை அதிகரிக்க செய்யும். நினைத்தது நடக்குமா என்ற சந்தேகத்தில் முயற்சியை கைவிட வேண்டாம் என்கிறது. வாழ்க்கையை அர்த்தம் உள்ளதாக அமைத்துக் கொள்ள உதவும் நுால்.
–
டி.எஸ்.ராயன்