முற்கால தமிழர் சமயம், வழிபாட்டு முறை, நம்பிக்கை மற்றும் சமூக கொள்கை பற்றி விவரிக்கும் நுால். முதல் தமிழ்ச் சங்கம் தென்மதுரையிலும், இரண்டாம் சங்கம் கபாடபுரத்திலும், மூன்றாம் தமிழ்ச் சங்கம் இன்றைய மதுரையிலும் நடத்தப்பட்டதாக குறிப்பிடுகிறது.
புறநானுாறு பாடலில், ‘தமிழகம்’ என்ற சொல் பயன்படுத்தப் பட்டுள்ளதை சுட்டிக்காட்டுகிறது. ஐவகை நில வழிபாடுகள், ஆசிவகம் என்ற மரபு வழிபாடு, நடுகல் வழிபாடு பற்றி விளக்கியுள்ளது. புத்த மதத்தின் தாக்கமே மொட்டையடிக்கும் பழக்கம் என்கிறது. முருகக் கடவுளை பல நாட்டினரும் வணங்குவதையும் விளக்குகிறது. இறுதியில் நாயன்மார்கள், ஆழ்வார்கள் குறித்தும் சுருக்கமாக விபரங்கள் கூறப்பட்டுள்ளன.
– டாக்டர் கலியன் சம்பத்து