பெண்கள் உரிமை பெற பாதை வகுத்த மருத்துவர் முத்துலட்சுமி ரெட்டியின் வாழ்க்கை வரலாற்று நுால். இப்படியும் ஒருவர் வாழ்ந்திருக்க முடியுமா என வியப்பை தருகிறது.
வீட்டு சிறை துவங்கி, சமூக சிறை வரை பெண்கள் விடுதலை பெற வேண்டிய அவசியத்தை வலியுறுத்தி அதற்காக போராடியவர். குழந்தை திருமண ஒழிப்பு, தேவதாசி முறை ஒழிப்பு போன்றவற்றுக்கு சட்டம் கொண்டு வந்தவர். அடையாறு புற்று நோய் மருத்துவமனையை உருவாக்கிய சாதனையாளர்.
டாக்டர் முத்துலட்சுமி ரெட்டியின் போராட்ட வாழ்வையும், அவர் வாழ்ந்த காலத்தையும் பதிவு செய்கிறது. போராடி போராடி ஒவ்வொரு அடியையும் எடுத்து வைத்துள்ள விதத்தை பதிவு செய்துள்ளது. ஆங்கிலத்தில் இருந்து மிக எளிய நடையில் தமிழாக்கம் செய்யப்பட்டுள்ளது.
– ஒளி